சனிப்பெயர்ச்சி: சனி பகவான் ஸ்லோகம்; தினமும் செய்யவேண்டிய பரிகாரங்கள்!

சனிப்பெயர்ச்சி: சனி பகவான் ஸ்லோகம்; தினமும் செய்யவேண்டிய பரிகாரங்கள்!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோரும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

ஒவ்வொரு ராசியிலும் சனியின் நிலை:

நட்சத்திரம் சனியின் நிலை

மேஷம் நீசம்

ரிஷபம் நட்பு

மிதுனம் நட்பு

கடகம் பகை

சிம்மம் பகை

கன்னி நட்பு

துலாம் உச்சம்

விருச்சிகம் பகை

தனுசு நட்பு

மகரம் ஆட்சி

கும்பம் ஆட்சி

மீனம் நட்பு

ஒவ்வொரு கிரகத்துடனும் சனியின் நிலை:

கிரகம் - சனியின் நிலை

சூரியன் - பகை

சந்திரன் - பகை

செவ்வாய் - பகை

புதன் - நட்பு

குரு - சமம்

சுக்கிரன் - நட்பு

*********************

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சனி காயத்ரி மந்திரம்:

ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!

**************

ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!

*******************

ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்!

*******************

ஓம் சனீஸ்வராய வித்மஹே

சாயாபுத்ராய தீமஹி

தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!

*****************

ஓம் சதுர்புஜாய வித்மஹே

தண்டஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!

சனி பகவான் ஸ்லோகம்:

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்

சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

பொருள் :

கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.

பொதுவான பரிகாரங்கள்:

தினமும் விநாயகர் - ஆஞ்சநேயர் வழிபாடுகளை மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

தினமும் விநாயகர் அகவல் - ஹனுமன் சாலீசா - சுந்தரகாண்டம் முதலானவற்றைப் பாராயணம் செய்வது நல்ல பலன்களைப் பெற்றுத் தரும்.

இல்லத்தில், அடிக்கடி மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்வதும் நிறைவான மாற்றத்தைக் கொடுக்கும்.

தினமும் முன்னோர் வழிபாட்டைச் செய்வது நல்லது. குறைந்தபட்சம் அமாவாசை தினத்திலாவது முன்னோர்களை வழிபடுவது பலம் சேர்க்கும்.

தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in