சனிப்பெயர்ச்சி : சனி பகவான் பயோடேட்டா இதுதான்!

சனிப்பெயர்ச்சி : சனி பகவான் பயோடேட்டா இதுதான்!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோரும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

சனி பகவானைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம்.

இதோ... சனி பகவான் பயோடேட்டா:

சொந்த வீடு - மகரம், கும்பம்

உச்சராசி - துலாம்

நீச்சராசி - மேஷம்

குணம் - குரூரம்

மலர் - கருங்குவளை

ரத்தினம் - நீலம்

கிரக லிங்கம் - அலி

வடிவம் - நெடியர் (நடுத்தர உயரம்)

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பாஷை - அந்நிய பாஷை

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 2 1/2 வருஷம்

வஸ்திரம் - கருப்பு பட்டு

க்ஷேத்திரம் - திருநள்ளாறு, திருக்குளந்தை(பெருங்குளம்), திருக்கொள்ளிக்காடு (திருக்குவளை அருகில்), குச்சனூர், சனி சிக்னாபூர், தனி விநாயகர் மற்றும் ஆஞ்சநேய ஸ்வாமி கோயில்கள்

ஆசனம் - வில் அம்பு

ஸமித்து (ஹோமக் குச்சி) - வன்னி

நைவேத்தியம் - எள்ளு சாதம் (இனிப்பு அல்லது காரம்)

தேவதை - ம்ருத்யு, சிலர் எமன் என்பர்

ப்ரத்யதி தேவதை - திருமுக்தி, பிரஜாபதி

திசை - மேற்கு

வாகனம் - காகம். கழுகையும் சொல்கின்றனர்.

தானியம் - எள்

வஸ்து - எண்ணைய் அதிலும் நல்லெண்ணெய்

உலோகம் - இரும்பு

கிழமை - சனிக்கிழமை

பிணி - வாதம்

சுவை - கசப்பு

நட்பு கிரகங்கள் - புதன், தேய்பிறை சந்திரன், சுக்கிரன்

பகை கிரகங்கள் - சூரியன், வளர்பிறை சந்திரன், செவ்வாய்

சம கிரகங்கள் - குரு (வியாழன்)

காரகம் - ஆயுள்

தேக உறுப்பு - தொடையிலிருந்து கால்கள் வரை

நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி

திசை வருடம் - 19 ஆண்டுகள்

மனைவி - நீளாதேவி

உபகிரகம் - மாந்தி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in