சனிப்பெயர்ச்சி: ரோகிணி அன்பர்களே! எதிர்பார்த்த பணவரவு; வேலையால் டென்ஷன்; சிக்கனம் தேவை; நண்பர்களால் உதவி!

சனிப்பெயர்ச்சி: ரோகிணி அன்பர்களே! எதிர்பார்த்த பணவரவு; வேலையால் டென்ஷன்; சிக்கனம் தேவை; நண்பர்களால் உதவி!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

ரோகிணி :

சனி பகவான் உங்களின் இருபதாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சுக்கிரன் - சந்திரன் அம்சத்தில் பிறந்திருக்கும் நீங்கள் கவர்ச்சியான பேச்சின் மூலம் காரியங்களை சாதிக்கும் திறமை உடையவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சில்லறைச் சண்டைகளும் பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.

கலைத்துறையினர் சீரான பலன்களைக் காண்பார்கள். ஆனாலும் இரவு பகல் பாராமல் அதிகமான உழைப்பு தேவைப்படும். வரவு அதிகமாக இருக்கும். சிக்கனமாக செலவழிக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும்.

பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் பாடங்களைப் படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: கிருஷ்ணருக்கு அர்ச்சனை செய்து வணங்க காரிய வெற்றி உண்டாகும். மாற்றங்கள் வரும்.

81% நல்ல பலன்கள் வந்து சேரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in