சனிப்பெயர்ச்சி: ரேவதி அன்பர்களே! மதிப்பு கூடும்; முயற்சியில் வெற்றி; வேலையில் பதவி உயர்வு; வருமானம் அதிகரிக்கும்!

சனிப்பெயர்ச்சி: ரேவதி அன்பர்களே! மதிப்பு கூடும்; முயற்சியில் வெற்றி; வேலையில் பதவி உயர்வு; வருமானம் அதிகரிக்கும்!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

ரேவதி:

சனி பகவான் உங்களின் இருபத்தி நான்காவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

குரு, புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் அடுத்தவர்களுக்கு பயனுள்ளவராக வாழ்வீர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்தவொரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும்.

குடும்பத்திற்குத் தேவையானப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலனில் கவனம் தேவை.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். நிதானமாகவும் சரியாகவும் தேர்ந்தெடுத்துச் செயல்படுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை.

பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.

மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாகப் படிப்பது நல்லது.

பரிகாரம்: திருச்செந்தூர் செந்திலாண்டவரை நினைத்து,தினமும் வணங்கி வாருங்கள். மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன்கள் கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால், தன சேர்க்கை ஏற்படும்.

72% நற்பலன்கள் கிடைக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in