சனிப்பெயர்ச்சி: கிருத்திகை அன்பர்களே! காரியத்தில் வெற்றி; விரும்பியவர்கள் சேருவார்கள்; பண வரவு உண்டு!


சனிப்பெயர்ச்சி: கிருத்திகை அன்பர்களே! காரியத்தில் வெற்றி; விரும்பியவர்கள் சேருவார்கள்; பண வரவு உண்டு!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

கார்த்திகை:

சனி பகவான் உங்களின் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சூரியனுடைய அம்சத்தில் பிறந்த நீங்கள் தந்தையாரின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பீர்கள்

இந்த சனிப்பெயர்ச்சியில் தொடக்கத்தில் எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். நட்சத்திராதிபதி சூரியன் சஞ்சாரத்தால் பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

கலைத்துறையினருக்கு வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.

அரசியல்வாதிகளுக்கு சில நேரங்களில் உங்கள் பணிகளில் தொய்வும், அதன்மூலம் மனதில் லேசான வருத்தமும் ஏற்படலாம். அதற்காக வருந்த வேண்டாம். அவையெல்லாமே தற்காலிகமாக தோன்றி பின் மறைந்து போகும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட காரிய அனுகூலம் உண்டாகும். மனக் குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். முயற்சிகள் பலிதமாகும்

76% பலன்கள் நல்லதாக அமையும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in