சனிப்பெயர்ச்சி: உத்திரம் அன்பர்களே! எதிலும் வெற்றி; புதிய வேலை; பிள்ளைகளால் பெருமை; செயலில் உற்சாகம்!

சனிப்பெயர்ச்சி: உத்திரம் அன்பர்களே! எதிலும் வெற்றி; புதிய வேலை; பிள்ளைகளால் பெருமை; செயலில் உற்சாகம்!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

உத்திரம்:

சனி பகவான் உங்களின் பனிரெண்டாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சூரியன் அம்சத்தில் பிறந்த நீங்கள் சிக்கனத்தைக் கடைபிடிப்பவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் பேச்சின் இனிமை மற்றும் சாதுர்யத்தின் மூலம் காரியத்தில் வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும்.

தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும்.

அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும்.

பெண்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: ஸ்ரீஐயப்ப சுவாமியை வணங்குவதன் மூலம் உடல் நலம் சீராகும். பொருளாதாரச் சூழல் நன்றாக இருக்கும். இந்த சனிப்பெயர்ச்சியில், உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

65% நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in