சனிப்பெயர்ச்சி: அனுஷம் அன்பர்களே! நம்பிக்கை கூடும்; திடீர் பண வரவு; புதிய வேலை; மன நிம்மதி!

சனிப்பெயர்ச்சி: அனுஷம் அன்பர்களே! நம்பிக்கை கூடும்; திடீர் பண வரவு; புதிய வேலை; மன நிம்மதி!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

அனுஷம்:

சனி பகவான் உங்களின் ஏழாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

செவ்வாய் - சனி அம்சத்தில் பிறந்த நீங்கள் சுகதுக்கம் பாராமல் உழைப்பவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்தக் காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவு இருக்கும். இடமாற்றம்,வெளியூர்ப் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும்.

தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்துவேற்றுமை நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் உங்களின் உழைப்பின் மூலம் சிறந்த நிலைக்கு வரலாம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும்.

பெண்கள் எந்தச் செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள், வீண் அலைச்சல் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

பரிகாரம்: சித்தர்களை தினமும் வணங்கி வாருங்கள். மன நிம்மதி அதிகரிக்கும். மனதில் இருக்கும் கலக்கம் அகலும்.

68% நல்ல பலன்கள் கிடைக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in