
இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!
உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.
சனிப்பெயர்ச்சி:
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:
தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை
வாக்கியப் பஞ்சாங்கப்படி:
பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை
மகம்:
சனி பகவான் உங்களின் பதினான்காவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சூரியன் - கேது அம்சத்தில் பிறந்த நீங்கள் அனைத்துத் துறைகளிலும் அறிவுத்திறனுடன் ஜொலிப்பீர்கள்.
இந்த சனிப்பெயர்ச்சியில் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு தொடர்பான கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். சூரியன் சஞ்சாரத்தால் அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு நிம்மதியை இழக்கச் செய்யும். பிள்ளைகள் புத்திசாதுர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியைத் தரும்.
கலைத்துறையினருக்கு பிறமொழி படங்களில் பணிபுரிய சந்தர்ப்பம் கூடி வந்தால் அந்த வாய்ப்பினை நழுவ விட்டு விடாதீர்கள். புகழ் மற்றும் விருதுகளை வாங்குவதற்கு சிறிது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிவரும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு பொதுப்பணிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் மற்றும் தோல்விகள் இருக்காது. சிலர் கௌரவப் பதவி கிடைக்கப் பெறுவார்கள்.
பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
பரிகாரம்: விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இந்த சனிப்பெயர்ச்சியால், அதிர்ஷ்டம் தரும் வாய்ப்புகள் அமையப் போகிறது!
70% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.