சனிப்பெயர்ச்சி: மிருகசீரிஷ அன்பர்களே! கவலை தீரும்; வாழ்க்கை உயரும்; காரியத்தில் வெற்றி!

சனிப்பெயர்ச்சி: மிருகசீரிஷ அன்பர்களே! கவலை தீரும்; வாழ்க்கை உயரும்; காரியத்தில் வெற்றி!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

மிருகசீரிஷம்:

சனி பகவான் உங்களின் பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

செவ்வாயை நட்சத்திர அதிபதியாகக் கொண்ட நீங்கள் எடுத்துக் கொண்ட காரியங்களை வேகமாக செய்து முடிக்கும் திறன் உடையவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். நட்சத்திராதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.

கலைத்துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு உங்கள் தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள்.

பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

பரிகாரம்: நந்திதேவரை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும். சுபவிரயச் செலவுகள் உண்டாகும்.

82% நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in