சனிப்பெயர்ச்சி: சுவாதி அன்பர்களே! பணத்தேவை கூடும்; கோபம் வேண்டாம்; வீண் பகை உண்டு;பொறுமை அவசியம்!

சனிப்பெயர்ச்சி: சுவாதி அன்பர்களே! பணத்தேவை கூடும்; கோபம் வேண்டாம்; வீண் பகை உண்டு;பொறுமை அவசியம்!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

சுவாதி:

சனி பகவான் உங்களின் ஒன்பதாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சுக்கிரன் - ராகு அம்சத்தில் பிறந்துள்ள நீங்கள் சோம்பல் என்பதே அறியாதவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் பணத்தேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண் பகை முதலானவை ஏற்படலாம் உங்களைக் கண்டு அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து எதையும் அமைதியாக எடுத்துச் சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

கலைத்துறையினர் ஏற்றம் காண்பார்கள். உங்கள் பொருட்கள் திருடு போகலாம். கவனமுடன் இருங்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு மனஅமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை உருவாகும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாகப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீநரஸிம்மரை தினமும் வணங்கி வாருங்கள். காரியத் தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். இந்த சனிப்பெயர்ச்சியால், புதிய வீடு மனை பூமி வாங்கும் யோகத்தைப் பெறுவீர்கள்.

68% நற்பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in